#BREAKING: நல்லாளுமை விருதுகள் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

2022ம் ஆண்டிற்கான நல்லாளுமை விருது அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 2022-ஆம் ஆண்டுக்கான நல்லாளுமை விருதுகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘நல் ஆளுமை’ விருதுக்கு தேர்வானவர்களின் விபரங்கள் இதோ.

  • செங்கல் சூளையில் பணிபுரிந்தவர்களை மீட்டு,வாழ்க்கை தரத்தை உயர்த்திய திருவள்ளூர் ஆட்சியருக்கு விருது.
  • நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளை மேற்கொண்ட திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது.
  • திருநங்கைகளின் வாழ்கை மாற்றத்திற்காக முன்முயற்சி எடுத்த செங்கல்பட்டு சமூகநல அலுவலருக்கு விருது.
  • திருநெல்வேலியில் பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்ததற்காக அம்மாவட்ட ஆட்சியருக்கு நல் ஆளுமை விருது.
  • சிவகங்கையில் நீர்நிலைகளை மீட்ட மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தற்போதைய புவியியல், சுரங்கதுறை இயக்குநராக செயப்படுபவருக்கு விருது.
  • சென்னை காவல் ஆணையர், வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளருக்கு நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment