#BREAKING: ஆளுநருக்கு கருப்புக் கொடி.. இதில் எந்த உண்மையில் இல்லை – முதலமைச்சர் விளக்கம்!

தமிழக ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, தருமபுரம் 27வது ஆதின நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று மயிலாடுதுறை சென்ற தமிழக ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டதை கண்டித்து, பேரவையில் இருந்து அதிமுக, பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழக ஆளுநர் சென்ற வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டதாக கூறப்படுவதில் எந்த உண்மை இல்லை என காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்படியிருந்த கருப்பு கொடிகளை வீசி எரித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்று தெரிவித்தார்.

இதனால் ஆளுநருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆளுநருக்கு எதிரான போராட்டம் குறித்து சட்டம், ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார் என்று முதலமைச்சர் கூறினார். இதன் நமக்கு சான்ஸ், இதனை அரசியலில் பயன்படுத்த வேண்டும். இது அரசியல் கட்சிக்கு சாதாரணமாக இருக்கக்கூடிய இயல்புதான். ஆனால், திட்டமிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் சேர்ந்துதான் அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால், இந்த அறிக்கை மட்டும் தனித்தனியாக வந்தது. அப்பவே புரிந்துகொள்ளலாம். ஆளுநர் விவகாரத்தில் நடக்காத ஒன்றை நடந்தததாக கூறி எதிர்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என குறிப்பிட்டார்

ஆளுநரின் வாகனம் கற்கள் மற்றும் எந்த பொருளாலும் பாதிக்கப்படவில்லை என்பதை ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியும் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் இந்த எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்பதை உறுதி அளிக்கிறேன். காவல்துறை அளித்த பாதுகாப்பால் ஆளுநரின் பயணம் பாதுகாப்பாக அமைந்தது. போராட்டம் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. போராட்டம் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என கூறிய முதல்வர், அரசின் விளக்கங்களை கேட்டு, அதன் பின்னர் அதிமுக மற்றும் பாஜகவினர் பேரவையில் வெளிநடப்பு செய்திருந்தால் சரி என விளக்கமளித்தார்.