கறி குழம்பை மிஞ்சும் பலாக்கொட்டை குழம்பு..! செய்முறை ரகசியம் இதோ ..!

jack fruit seed curry

Jack fruit seed curry -கறி  குழம்பு சுவை போல பலாக்கொட்டை குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

செய்முறை;

  • பலாக்கொட்டை =கால் கிலோ
  • சீரகம் =ஒரு ஸ்பூன்
  • சோம்பு= ஒரு ஸ்பூன்
  • மிளகு= ஒரு ஸ்பூன்
  • பட்டை= ஒரு துண்டு
  • கிராம்பு= 2
  • சின்ன வெங்காயம் =5
  • இஞ்சி =ஒரு இன்ச் அளவு
  • பூண்டு= ஆறு
  • தேங்காய் =கால் கப்
  • மல்லித்தூள்= இரண்டு ஸ்பூன்
  • மிளகாய் தூள் =ஒரு ஸ்பூன்
  • காஷ்மீர் மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் =2
  • பச்சை மிளகாய் =இரண்டு
  • தக்காளி= இரண்டு

செய்முறை;

மிக்ஸியில் சீரகம், மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை லேசாக அரைக்கவும். பிறகு அதிலே சின்ன வெங்காயம், தேங்காய், இஞ்சி பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் சோம்பு, பச்சை மிளகாய் கருவேப்பிலை ,சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும் .

வெங்காயத்தில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அதிலே தக்காளியையும் சேர்த்து நன்கு மசிய வதக்கவும். இப்போது அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும் .பிறகு பலாக்கொட்டைகளை  தோல் நீக்கி நறுக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்து கலந்து விடவும்.

இப்போது அந்த பலாக்கொட்டைகள் நன்கு வேகும்  வரை வேக வைத்துக் கொள்ளவும். பலாக்கொட்டைகள் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அதில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான பலாக்கொட்டை குழம்பு தயாராகிவிடும்.