சமூக வலைதளமான ட்விட்டரில் பயனாளர்களுக்கு புதிய வசதி!

சமூக வலைதளமான ட்விட்டர் ,செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அது தொடர்பான இணைப்புகளை, பயனாளர்களின் முகப்பு பக்கத்தில் தெரிவிக்கும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், முதன்மையான செய்திகள், நேரலை செய்திகள், செய்தி நிறுவனங்களின் பதிவுகளுக்குள் செல்லும் வசதி, பயனாளர்களுக்கு கிடைக்கும். அதேநேரம், செய்திகளில் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வதில் உரிய கவனம் செலுத்தப்படும் என்று, ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனாளர்களில் செய்தி ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் சமூகவலைதளம் என்ற நிலையில் இருந்து செய்திக்கும் முன்னுரிமை … Read more

பாஜக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் ஆக்ரோஷம் ((Jan Akrosh)) என்ற பெயரில், காங்கிரஸ் சார்பில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே, 4 ஆண்டுகளில் மோடி அரசு நிறைவேற்றவில்லை என்றார். இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தரப்பட்டதா; கருப்பு பணம் மீட்கப்பட்டதா என்று கேள்வியெழுப்பிய ராகுல், காங்கிரஸ் … Read more

பேச மறுத்ததால் காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!கழுத்தறுபட்ட நிலையில் மாணவி மருத்துவமனையில் அனுமதி!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் பலர் முன்னிலையில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த காதலனால் அந்த பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்துவருபவர் லாவண்யா, இவரும் அதே பல்கலை கழகத்தில் படித்து வருபவருமான நவீன் என்பவரும் காதலித்துவந்ததாக தெரிகிறது. இன்றுகாலை அந்த பகுதி தபால் நிலையம் அருகே நின்று இருவரும் பேசிகொண்டு இருந்துள்ளனர், அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, இதனால் ஆத்திரமடைந்த நவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லாவண்யாவின் கழுத்தை அறுத்துள்ளார். … Read more

Google, You Tube ,ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மிகச்சிறந்த ஆசிரியர்கள்!அனுதீப் துரிசெட்டி

குடிமைப்பணி தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த அனுதீப் துரிசெட்டி ,ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு கூகுளும், யூ டியூப்பும் மிகச் சிறந்த ஆசிரியர்கள் என தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ள அனுதீப் துரிசெட்டி, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிப்பதற்காக, தாம் எந்தவொரு பயிற்சி மையத்திலும் சேரவில்லை என்றார். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தேவையான அனைத்து விவரங்களும் ஆன்லைனில் கிடைப்பதாக தெரிவித்துள்ள அவர், தாம் பல மணி நேரம் இணையதளத்திலேயே செலவிட்டதாகவும் கூறியுள்ளார். பத்திரிகைகளையும், செய்தித்தாள்களையும் விட, ஐ.ஏ.எஸ். … Read more

IPL 2018:இந்த வெற்றி கண்டிப்பா இவங்களதான் சேரும்! சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் புகழாரம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஐபிஎல் போட்டியின் 28வது ஆட்டம் நேற்று  மாலை 4 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.   அணியின் ஸ்கோர் 17 ஆக இருந்த போது தவான் அவுட் ஆனால். அதன் பின் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹேல்ஸ், கேன் வில்லியம்சன் இணை பொறுப்பாக ஆடியது. ஹேல்ஸ் 45 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து கேன் … Read more

மத்திய அரசுதான் மண்ணெண்ணை தட்டுபாட்டிற்கு காரணம்!உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் மண்ணெண்ணை அளவை மத்திய அரசு குறைத்ததே தமிழகத்தில் நிலவும் மண்ணெண்ணை தட்டுபாட்டுக்குக் காரணம் என தெரிவித்துள்ளார். சித்திரைப் பௌர்ணமியையொட்டி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் அவர் சிறப்பு வழிபாடு செய்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்:உதவி பேராசிரியர் முருகன், கருப்பசாமிக்கு மே. 14 வரை நீதிமன்ற காவல் !

நிர்மலா தேவி விவகாரத்தில்  கருப்பசாமி மற்றும் முருகனுக்கு மே 14 வரை நீதிமன்ற காவல் அடைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில்  ,பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் சிபிசிஐடி காவல் முடிந்து இன்று ஆஜர்படுத்தப்பட்டனர் . அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக வெளியான ஆடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக … Read more

உத்தரப்பிரதேசத்தில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.மில் போலி ரூபாய் தாள்கள்!

போலி ரூபாய் தாள்கள் ,உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.மில் வைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கான்பூரில் உள்ள அந்த ஏ.டி.எம்.மில் 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்தவர், தாள்களை எண்ணிப் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அதில் ஒரு 2 ஆயிரம் தாள் போலி என்று அறிந்த அவர், சில தாள்கள் கிழிந்து இருப்பதையும் கண்டு போலீசில் புகார் அளித்தார். ஏ.டி.எம்.மில் போலி ரூபாய் தாள்களை வைத்தது யார் என்பது தொடர்பாக … Read more

ஒரே பிரசவத்தில் சீனாவில் 5 குட்டிகளை ஈன்ற மஞ்சூரியன் இன புலி!

அரிதாகி வரும் மஞ்சூரியன் இனத்தை சேர்ந்த புலி,சீனாவில்,ஒரே பிரசவத்தில் 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில், 3 பெண் குட்டிகள் அடங்கும். அங்குள்ள Heilongjiang மாகாணத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில், தாய் புலியும், குட்டிகளும் நலமாக உள்ளதாக தெரிவித்த மிருகக்காட்சி சாலை ஊழியர்கள், தாய் புலிக்கு ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுவதாகவும், ஆட்டுப்பாலில் முட்டைகள் கலந்து அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுதவிர, புலிக்குட்டிகளுக்கு புட்டிப்பாலும் புகட்டப்படுகிறது. இதே மஞ்சூரியன் புலி, கடந்த 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளிலும், ஒரே பிரசவத்தில் தலா, … Read more

IPL 2018:தல,சின்ன தல,தமிழ் புலவர்களின் இளவரசிகள் விளையாடும் ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ !சமூக வலைதளங்களில் வைரல் !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ,இந்திய கிரிகெட் வீரர்கள், தல மகேந்திர சிங் தோனி, சின்ன தல சுரேஷ் ரைனா மற்றும் புதிய தமிழ்ப் புலவர் ஹர்பஜன் சிங் ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அனைவரும் அறிந்ததே. இவர்கள் கிரிகெட் விளையாடுவதை வியந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். இவர்கள் சிறப்பாக விளையாட வீடியோக்கள் என்றுமே சமூக வலைத்தளங்களில் பிரபலம் தான். ஆனால் இதற்கெல்லாம் டஃப் கொடுக்க வெளியாகியுள்ளது ஒரு க்யூட் வீடியோ. தோனி மகள் ஸிவா, ரைனா மகள் … Read more