ராணுவ வாகனம் மீது தாக்குதல் – 12 பேர் காவல், ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று.!

இந்த விவகாரம் தொடர்பாக ஹெலிகாப்டர், ஆளில்லா விமானங்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு தீவிர வேட்டையில் ஈடுபட்டதில், சந்தேகத்தின் பேரில் 12 பேர் காவலில் வைக்கப்பட்டுள்னர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன் தினம் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியது, இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் படுகாயமடைந்த ஒருவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் பிம்பர் காலி மற்றும் ஜர்ரன் வாலி கலி இடையே தொடர்ந்து இரண்டாவது நாளாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Jammu Kashmir Poonch ARMY
Jammu Kashmir Poonch ARMY [Image Source : Twitter]

தீவிர வேட்டை:

தற்போது, அப்பகுதியில் தீவிரவாதிகள் யாரேனும் இருக்கிறார்களா என பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதாவது, பூஞ்ச் மாவட்டம், படா டோரியா பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் ஆளில்லா விமானங்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் ராணுவ வீரர்கள் தீவிரமாக தேடி வந்ததில், குறைந்தது 12 பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர். மேலும், இந்தத் தாக்குதலுக்குப் “தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு ” பொறுப்பேற்றுள்ளது.

Jammu Kashmir Poonch ARMY
Jammu Kashmir Poonch ARMY [Image Source : Twitter]

தீவிரவாதி தாக்குதல் :

இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் தரப்பில், இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து இந்திய ராணுவத்தளபதி மனோஜ் பாண்டே, தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதால், வாகனம் தீப்பிடித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

Jammu Kashmir Poonch ARMY
Jammu Kashmir Poonch ARMY [Image Source : Twitter]

அடுத்தகட்ட நடவெடிக்கை: 

முதற்கட்ட தகவல்கள் சுமார் ஐந்து பயங்கரவாதிகள் இருப்பதாகவும், ராணுவ டிரக் மீது மூன்று வெவ்வேறு பக்கங்களில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாக்குதல் நடந்த ஒரு நாள் கழித்து, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் மற்றும் கூடுதல் தலைமை இயக்குநர் முகேஷ் சிங் ஆகியோர் விசாரணையை மேற்பார்வையிட ரஜோரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். நேற்று, இரண்டு அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

மேலும், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தஸ்து அதிகாரி தலைமையில் ஒரு குழுவும் வந்துள்ளது, ஏனெனில் ஏஜென்சி இந்த வழக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

Leave a Comment