சொத்து குவிப்பு வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜரானார் திமுக எம்பி ராசா!

சொத்து குவிப்பு வழக்கில் எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜர்.

சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்காக திமுக எம்பி ராசா சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். சம்மன் அனுப்பிய நிலையில், எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜரானார். கடந்த 2004 – 2007 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய சுற்றுசூழல் அமைச்சராக பதவி வகித்தார் திமுக எம்.பி. ராசா.

அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.55 கோடி மதிப்பிலான சொத்து சேர்த்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. ஏற்கனவே கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.  வருமானத்திற்கு அதிகமாக 575 சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ஆ.ராசா உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளது. 2004-2007 காலகட்டத்தில் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியது. இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்காக திமுக எம்பி ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Leave a Comment