FIFA Champion:உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா

உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் மோதின.

தொடக்கம் முதலே அர்ஜென்டினா தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது அதன் பலனாக 23 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டிக் சூட்டை நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலாக மாற்றினார்.அதன் பின்னர் 36-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் தி மரியா தனது பங்கிற்கு ஒரு அற்புதமான கோலை அடித்தார்.

முதல் பாதி 2-0 என்று முடிந்த நிலையில் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணி தனது முதல் கோலை  அடிக்க கடுமையாக போராடியது எனினும் எம்பாப்பே உட்பட பிரான்ஸின் முன்னணி வீரர்களால் அர்ஜென்டினாவின் தடுப்பு வீரர்களை தாண்டி  பந்து செல்வது மிக கடுமையாக இருந்தது.

ஆனால் அர்ஜென்டினா 80வது நிமிடத்தில் செய்த தவறால் கிடைத்த பெனால்டிக் சூட்டை எம்பாப்பே அற்புதமாக கோலாக மாற்றினார்.மீண்டும் எம்பாப்பே என்பது போல் 81 வது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்து அர்ஜென்டினாவிற்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

கொடுக்கப்பட்டுள்ள கூடுதலான பதினைந்து நிமிடத்தில் யாரும் கோல் அடிக்காததால் சமநிலையில் இருந்தது மீண்டும் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 108 வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது அற்புதமான கோலை அடிக்க அதற்கு பதிலடியாக 118 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டிக் சூட்டை எம்பாப்பே  அடிக்க ஆட்டம் 3-3 என்று சமநிலையில் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட டைப் பிரேக்கரில் 4-2 என்று அடித்து சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா.

Leave a Comment