அர்ஜென்டினா சாம்பியன் ! மெஸ்ஸி க்கு வாழ்த்துக்கள் – மு.க.ஸ்டாலின்

உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா டைப் பிரேக்கரில் 4-2 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

உலககோப்பையின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்  மற்றும் அர்ஜென்டினா க்கு இடையே அணல் பறக்கும் ஆட்டம் நடைபெற்றது.இரு அணிகளும் இருமுறை சாம்பியன் என்பதால் யார் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் என்ற ஆவலுடன் போட்டி நடைபெற்றது.

முதல் பாதியில் 2-0 என்று அர்ஜென்டினா முன்னிலை பெற்று இருந்த  நிலையில் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணி இரு கோல்களை அடிக்க 90 நிமிட முடிவில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

அதன் பின்னர் கொடுக்கப்பட்ட இரு கூடுதல் 15 நிமிட ஆட்டத்தில் முதலில் அர்ஜென்டினா இரண்டாவதாக பிரான்ஸ் ஒரு கோலை அடிக்க ஆட்டம் மீண்டும் சமநிலையில் முடிந்தது .இதனைத்தொடர்ந்து  நடத்தப்பட்ட டைப் பிரேக்கரில் 4-2 என்று கோலை அடித்து சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா.

இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போட்டி மிகவும் சிறப்பான உறுதியான போட்டி.பிரான்ஸ் அணியின் விடாத மனப்பான்மை மற்றும் எம்பாப்பேவின் ஹாட்ரிக் கோல் சிறந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ஒன்றாக மாற்றியது.

உலகக்கோப்பையை வென்றதற்கு அர்ஜென்டினா ,மெஸ்ஸி க்கு வாழ்த்துக்கள் என்றும் மார்டினெஸுக்குச் சிறப்புப் பாராட்டுச் சொல்ல வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.

stalin fifa tweet

Leave a Comment