சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு…ஆடி காரில் வந்து ஆட்டோவில் கிளம்பிய ஏ.ஆர்.ரகுமான்.!

சென்னை அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்க தனது ஆடி காரில் வந்த திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், சிறப்புப் பிரார்த்தனை முடித்துவிட்டு வெளியே வரும்போது, அவரை காண ரசிகர்கள் சூழ்ந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

READ MORE – மணிரத்னம் படத்துக்கு மட்டும் தான் ஓகே! ‘தக்லைஃப்’ குறித்து ஜெயம்ரவி!

இதனால், தன்னுடன் காரில் செல்ல முடியாமல் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த கூட்ட நெரிசலைத் தவிர்க்க, சிறிது தூரம் தள்ளி சென்று அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றதால் சிறுது பரபரப்பு ஏற்பட்டது.

READ MORE – நீ தான்பா சரியான ஆளு! பயோபிக் எடுக்க ‘ஆக்சன்’ இயக்குனரை தேர்வு செய்த இளையராஜா?

தமிழ் சினிமாவில் இவரது இசையமைப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் ரஜினி நடித்திருந்த லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகியது. இதனையடுத்து, பிரித்விராஜின் ஆடுஜீவிதம் திரைப்படமும் தனுஷின் ராயன், RC 16, தக் லைஃப்,
காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

Leave a Comment