மணிரத்னம் படத்துக்கு மட்டும் தான் ஓகே! ‘தக்லைஃப்’ குறித்து ஜெயம்ரவி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தொடர்ச்சியாக ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தாலும் பொன்னியின் செல்வன், தக்லைஃப் போன்ற மல்டி ஸ்டார்  படங்களிலும் நடித்து வருகிறார். இதில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகியும் விட்டது.

Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை?

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வரும் தக்லைஃப் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தக்லைஃப் படத்தில் ஜெயம் ரவி நடிக்கும் தகவல் அதிகாரப்பூர்வமாகவே கடந்த சில நாட்களுக்கு முன்பு  அறிவிக்கப்பட்டு விட்டது.

Read more- துணிவு vs வாரிசை தொடர்ந்து மீண்டும் மோதும் அஜித் – விஜய்…களைகட்ட போகும் திரையரங்கம்.!

இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி தக்லைஃப் படம் குறித்தும் மல்டி ஸ்டார் படங்களில் நடிப்பது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய ஜெயம் ரவி ” மணிரத்னம் சாரிடம் ‘நோ’ சொல்ல முடியாது. அவருடைய பாடங்களில் நடிக்கவேண்டும் என்பதெல்லாம் கனவு.

Read more- வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.!

எனவே, அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடித்து கொண்டே தான் இருப்பேன். அதனால் தக்லைஃப் திரைப்படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் நான் எக்ஸ்டெண்டட் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்தரமாக நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் முதல் வாரத்தில் இருந்து நான் நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்படவுள்ளது”  என்றும் நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்.

Leave a Comment