சிறிய உதவி போதும்.. தமிழக மாணவர்கள் அடிச்ச்சு தூள் கிளப்பி விடுவார்கள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்று ஐஐடி, என்ஐடி போன்ற இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்வதற்கு தேர்வாகியுள்ள மாணவ , மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

இந்த மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை வழங்கினார். இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், முதன்மை கல்வி நிறுவன தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெற வேண்டும் என்று தான், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி ஆகிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. கல்வி நிறுவனங்கள் அனைவரும் சென்று பயிலும் வண்ணம் பொதுவாக இருக்க வேண்டும். ஆனால், நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவான எண்ணிக்கையில் தான் இருந்தது.

இதனை போக்கவே, அனைவருக்கும் ஐஐடி திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்கள் என்னென்ன இருக்கிறது.? அதில் எப்படி சேர வேண்டும் என்கிற விவரம் தெரியவில்லை என குறிப்பிட்டார்

தற்போது, 225 அரசு பள்ளி மாணவர்கள் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு உயர்கல்வி பயில செல்ல உள்ளனர். கடந்த ஆண்டு 75 அரசுபள்ளி மாணவர்கள் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு பயில சென்றனர். இந்தாண்டு 225
அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு செல்ல உள்ளனர்.

கடந்த ஆண்டு, ஐஐடிக்கு பயில சென்ற அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை 1 மட்டுமே. இந்தாண்டு 6 அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடிக்கு பயில சென்றுள்ளனர்.
என்ஐடிக்கு கடந்த ஆண்டு 13 மாணவர்கள் பயில சென்றனர். இந்தாண்டு 55 அரசு பள்ளி மாணவர்கள் என்ஐடியில் பயில உள்ளனர். பெங்களூரு நேஷன் சைன்ஸ் கல்லூரியில் இந்தாண்டு 6 அரசு பள்ளி மாணவர்கள் பயில உள்ளனர்.

2 அரசு பள்ளி மாணவர்கள் அரசின் முழு செலவுடன் தைவான் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் பயில உள்ளனர். மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு 6 அரசு பள்ளி மாணவர்கள் பயின்ற நிலையில், இந்தாண்டு 20 மாணவர்களை பயில உள்ளனர். ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ச்சர் கல்லூரியில் 69 அரசு பள்ளி மாணவர்கள் என பல்வேறு முதன்மை கல்வி நிறுவனங்களில் 225 அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில உள்ளனர். தற்போது பயில போகும் மாணவர்கள், அடுத்து உங்களைப்போல வரும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீங்கள் வழிகாட்ட வேண்டும்.
அரசு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.