Annamalai Tweet: திமுகவின் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.! அண்ணாமலை

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே பலவித கருத்து மோதல் இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வின் ஊழல்களைப் பற்றி பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான், அதை திசை திருப்பவே சனாதனத்தைப் பற்றி பாஜக பேசி கொண்டு இருக்கிறது என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் ஒரு அமைச்சர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அண்ணாமலை, “திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் பதிலுக்காக இன்னும் காத்திருக்கிறோம்.

  1. பிஜிஆர் எரிசக்தி மோசடி
  2. ஊட்டச்சத்து கிட் மோசடி
  3. டிரான்ஸ்பார்மர் சப்ளை மோசடி
  4. சி எம்ஆர்எல் ஊழல்
  5. இடிஎல் இன்ஃப்ரா ஸ்கேம்
  6. போக்குவரத்து மோசடி
  7. நோபல் ஸ்டீல்ஸ் ஊழல்
  8. டி என்எம்எஸ்சி ஊழல்
  9. எச்ஆர் & சிஈ மோசடி மற்றும் பல

உங்கள் ஆட்சியில் பதவியில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. போர்ட்ஃபோலியோ இல்லாத உங்கள் அமைச்சர் ஒருவர், கேஷ் ஃபார் ஜாப் மோசடிக்காக சிறையில் இருக்கிறார்.

உங்கள் மகனும், உங்கள் கட்சிக்காரர்களும் இந்து தர்மத்தின் மீது நடத்தும் தாக்குதல், மேற்சொன்ன மோசடிகளைத் திசைதிருப்பும் செயலாகும். மேலும், உங்கள் கையில் இருக்கும் ஒரு காகிதத்தை நம்பி, சிஏஜி அறிக்கையை தவறாக மேற்கோள் காட்டி, உங்களை சங்கடப்படுத்துவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.