‘அங்காடித் தெரு’ நடிகை சிந்து மார்பகப் புற்றுநோயால் காலமானார்!

அங்காடித் தெரு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சிந்து மார்பக புற்றுநோயால் சென்னையில் உயிரிழந்தார்.

நடிகை சிந்து பல மாதங்களாகவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, சென்னை கிளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மார்பக புற்றுநோயால் இடது கை செயலிழந்து படுக்கையில் இருந்த அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னையில் காலமானதாக கூறப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் பலருக்கு உணவு அளித்து உதவி செய்த சிந்து, பல சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது, அவரது உடல் அஞ்சலிக்காக பழசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது இறுதி சடங்குகள் விருகம்பாக்கம் மின் மயானத்தில் இன்று நடைபெற உள்ளது.

நடிகை சிந்து 2010 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெருவில் துணை வேடத்தில் நடித்து பிரபலமானார். குழந்தை நடிகையாக அறிமுகமான இவர், பின்னர் சில படங்களில் நடித்தார். அவர் தனது 14 வயதில் திருமணம் செய்து கொண்டார், அதே ஆண்டில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.