அம்மன் கோயிலுக்கு சீல் – இரு சமூக மக்கள் 80 பேர் நேரில் ஆஜர்!

மேல்பாதி கிராமத்தில் சாதி பிரச்சனையால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் 80 பேரிடம் விசாரணை.

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் இருதரப்பினரும் நேரில் ஆஜராகியுள்ளனர். இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு சம்மன் அனுப்பட்ட நிலையில், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன் ஆஜராகியுள்ளனர்.

திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் தொடர்புடையவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் பலத்த பாதுகாப்பது போடப்பட்டுள்ளது.