திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு!

திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.2.36 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை வழங்கும் திட்டத்திற்காக 2023-24ம் நிதியாண்டில் ரூ.2.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என்று பேரவையில் சமூக நல துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை ரூ.1,000 லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி மார்ச் முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி திருநங்கைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 22,300 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்படும் எனவும் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

Leave a Comment