அனைத்து மதக்கோயில்கள் திட்டப்பணிகள்; நிதி ஒதுக்கீடு.!

தமிழக பட்ஜெட் 2023-24க்கான உரையில், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மேம்பட்டு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு அறிவிப்பு.

சட்டப்பேரவையில் இன்று தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான மின்னணு வடிவ பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையில், பழனி, திருத்தணி, சமயபுரம் கோயில்களின் மேம்பட்டு பணிகளுக்காக ரூ.485 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டிலுள்ள தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் புதுப்பிப்பு பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

Leave a Comment