காதல் மனைவி மடியில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் அஜித்.! வைரல் புகைப்படம் இதோ….

நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவரும் கடந்த 2000-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். திரைத்துறையில் ரசிகர்களுக்கு பிடித்த பேவரைட் ஜோடியாக இவர்கள் இருவரும் இருந்து வருகிறார்கள்.

Ajith Shalini
Ajith Shalini [Image Source : Twitter ]

இவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு காதலித்து வந்த சமயத்தில்  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில், தற்போது அஜித்- ஷாலினி எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அஜித் தனது மனைவி ஷாலினியின் மடியில் அமர்ந்து இருக்கிறார். அஜித்தை ஷாலினி இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thunivu
Thunivu [Image Source : Twitter ]

மேலும் நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலில் உலகம் முழுவதும் 80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment