அதிமுக பொதுச்செயலாளர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் தலைமையில் தொடங்கியது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வசமானது இன்னும் பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், பொதுக்குழு தீர்மானங்கள், விதி மாற்றம், நிர்வாகிகள் நீக்கம் உள்ளிட்டவைகளையும் தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. இதனால், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி ஐபிஎஸ்க்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில், தேர்தல் அங்கீகரித்ததை அடுத்து, தற்போது தலைமை கழக அலுவலகத்தில் முன்னாள் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி.

பின்னர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் பூங்கொத்து வழங்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி  உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம், பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்புகள் கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Leave a Comment