அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை.!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு, ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

அதிமுக பொதுகுழு செல்லும் அதிமுக பொதுக்குழு தீர்மனங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோடை விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு ஒரு மாதத்திற்கு பின் இன்று விசாரணைக்கு வருகிறது.

பொதுக்குழு செல்லும்:

அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பதும் உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.

பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை:

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.