முதலமைச்சர் மீது தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!

இடைத்தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முதலமைச்சர் மீது அதிமுக புகார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது தலைமையை தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் முத்தலைமைச்சர் பேசியது விதிமீறல் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகாரளித்த நிலையில் இந்ததிய தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக்க சார்பில் இன்பதுரை புகார் அளித்துள்ளார். மகளிருக்கான 1000 ரூபாய் வழங்கும் திட்டம், ஏற்கனவே அறிவித்த திட்டம். இது குறித்து பேசியது தேர்தல் விதி மீறல் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Leave a Comment