மனநோய்களைக் கண்டறியும் AI தொழில்நுட்பம்

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் அல்சைமர் நோய், ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மன இறுக்கம் உள்ளிட்ட  நோய்களைத் தடுப்பதற்கும், ஆரம்பக் கண்டறிதலுக்கும் மற்றும் குணப்படுத்துவதற்கும், ஜார்ஜியா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் TRENDS மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அறிவியல் அறிக்கைகள் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த ஏழு விஞ்ஞானிகள் குழு ஒரு அதிநவீன கணினி நிரலை உருவாக்கியது. இந்த ஆராய்ச்சிக்குஅல்சைமர் நோய், ஸ்கிசோஃப்ரினியா மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ளவர்கள் உட்பட 1200 க்கும் மேற்பட்ட நபர்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.

செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் (எஃப்எம்ஆர்ஐ) ஸ்கேன், மூளையின் இரத்த ஓட்டத்தில் மாறுபாடுகளைக் கண்டறிவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை மதிப்பிடுகிறது.

கணிசமான இமேஜிங் தரவுத்தொகுப்பைச் சேகரித்த பிறகு, AI தொழில்நுட்பம் அதை பகுப்பாய்வு செய்து, எதிர்காலத்தில் வரும் குறிப்பிட்ட நோய்களைப் பற்றி வெளிப்படுத்தும்.

ஒருவரது குடும்ப வரலாற்றுப்படி அல்சைமர், ஸ்கிசோஃப்ரினியா போன்ற மன நோய்கள் அக்குடும்பத்தைச் சேர்ந்த மற்றோவருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதை  நாம் அறிந்திருந்தாலும், அது எப்போது உருவாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த AI தொழில்நுட்பம் மூலம் மூளையின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் மனநோய்க்கான அபாயங்களை அடையாளம் கண்டு, சிறந்த  சிகிச்சைகளை வழங்க முடியும். இந்த கண்டுபிடிப்பு நோய்களை முன்கூட்டியே அறிய மருத்துவரீதியாக உதவியாக இருக்கும்.

Leave a Comment