ஆஹா…எதிர்பார்பை எகிற வைத்த அப்டேட்…’ProjectK’ படத்தில் இணைந்த கமல்ஹாசன்.!!

வெளியாவதற்கு முன்பே பலத்தை எதிர்பார்ப்புகளை கிளப்பிய திரைப்படம் என்றால் ப்ராஜெக்ட் கே “#ProjectK” திரைப்படம் என்று கூறலாம். இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்க படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் பிரபல நடிகரான கமல்ஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து பல பெரிய நட்சத்திரங்கள் இந்த ProjectK திரைப்படத்தில் இணைந்து வருவதால் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மேலும், இத்தகைய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.