நடித்தது 250 படங்கள்… 5 படங்கள் தான் எனக்கு பிடித்தவை …நடிகர் சத்யராஜ் பேச்சு.!

நடிகர் சத்யராஜ் அடிக்கடி தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக பேசிவிடுவார் என்றே கூறலாம். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட “தீர்க்கதரிசி” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சினிமா பற்றி தெரிந்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. எனவே, ஜோசியம் பார்த்துவிட்டு ஒரு படம் எடுக்க வரக்கூடாது’ என பேசி இருந்தார்.

அதனை தொடர்ந்து நேற்று கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ் நான் நடித்த 250 படங்களில் 5 படங்கள் தான் எனக்கு பிடித்தவை என கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” “சினிமாவில் நான் இதுவரை கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்திருக்கிறேன்.

ஆனால், அதில் பெரியார், அமைதிப்படை போன்ற 5 அல்லது 10 படங்கள்தான் எனக்குப் மிகவும் பிடித்த படங்கள். என்னுடைய கொள்கைக்கு உடன்பட்ட கதாபாத்திரங்கள். எனவே, அதுனால் எனக்கு குறிப்பிட்ட படங்கள் மட்டும் தான் பிடிக்கும். மற்ற எல்லாம் படத்தின் கதைக்காக நடித்ததுதான்” என கூறியுள்ளார்.

Leave a Comment