மதுரை விமான நிலையத்தில் கருவாடு கடை.. பிரதமரின் ஒரு பொருள் ஒரு நிலையம் திட்டத்தின் கீழ் நடவடிக்கை.!

பிரதமரின் ’ஒரு பொருள் ஒரு நிலையம்’ திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் பிரபலம் : மத்திய அரசு அண்மையில், ஒரு பொருள் ஒரு நிலையம் எனும் திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்தியது. இந்த ரயில் நிலையங்களில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பிரபலமான பொருட்களை விற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும்.

ஒரு பொருள் ஒரு நிலையம் : அப்படி, சென்னை, காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், நெல்லை, திருச்செந்தூரில் பனை பொருட்கள் என தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள 5000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களிலும்  ’ஒரு பொருள் ஒரு நிலையம்’  திட்டத்தின் கீழ் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருவாடு விற்பனை : இந்த திட்டத்தின் கீழ் தற்போது மதுரை விமான நிலையத்தில் கருவாடு விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி கடை ஒன்று மதுரை விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மண்டபம் ஊர்பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் கருவாடு இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment