தமிழ்நாடு அரசுக்கு தொல்லை தரவே ஓர் ஆளுநர்.. கீ.வீரமணி கண்டனம்!

2024 தேர்தலில் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள் என திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி அறிக்கை.

ரம்மிக்கு தடை விதித்து சட்டம்:

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தொடர் தற்கொலைகள் பதிவாகி வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு நவ.21ம் தேதி அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த  விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

குழு அமைப்பு:

இருப்பினும், தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை வித்திக்க அவசர சட்டத்தை நிறைவேற்றலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. இதன்பின் ஆராட்சி பொறுப்புக்கு வந்த திமுக அரசு ஆன்லைன் ரம்மிக்கு அவசர தடை விதிப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது. இந்த குழு அறிவு செய்த அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பித்தத்து.

அவசர சட்ட மசோதா:

இதன்பின்னர், கடந்த 2022 அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு இயற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. சட்ட மசோதாவுக்கு விளக்கம் கேட்டு மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைத்தார் ஆளுநர். அதன் பிறகு, தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்து, திருப்பி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்த நிலையில் கடந்த நவம்பர் 27ம் தேதியுடன் அவசர சட்டம் காலாவதியானது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்:

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 142 நாட்கள் கடந்துவிட்டது. இந்த நிலையில், அவசர சட்டத்தில் திருத்தங்கள் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநரை விமர்சித்து கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.

கீ.வீரமணி கண்டனம்:

அந்த வகையில், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கு தொல்லை தரவே ஓர் ஆளுநர்?, வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது எனவும் விமர்சித்துள்ளார். 2024 தேர்தலில் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள். மக்களாட்சியை செயல்படாவிடாமல், தேகத்தை செயற்கையாக உருவாக்கி விஷ பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறார் ஆளுநர்.

பூமராங் போல திரும்பிடும்:

தமிழ்நாடு அரசின் ஓர் அங்கம் என்பதை மறுத்துவிட்டு, எதிர்க்கட்சி தலைவர் போல செயல்படுகிறார் ஆளுநர். கற்பனையாக தயாரிக்கும் விஷ செய்திகள் உங்களுக்கே பூமராங் போல திரும்பிடும்  என்பதை உணருவீர்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனையில், பாஜக, சங் பரிவார்களின் முகமூடி கழன்று வீழ்ந்துவிட்டதை கண்டு உலகமே சிரிக்கிறது. தமிழ்நாடு மக்களுக்குள்ள தெளிவும், திறனும், இந்தியாவையே மாற்றி காட்டும் எனவும் குறிப்பிட்டுளார்.

Leave a Comment