தனியார் பள்ளிகளுக்கு இணையம் வழி அங்கீகாரம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.!

தனியார் பள்ளிகளுக்கான அரசின் உதவிகளை இனி இணையம் வழியாகப்பெறும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் அனுமதிகளை இணையம் வழியாகப்பெறும், இணைய தளத்தினையும்(portal), செயலியையும் தொடங்கி வைத்தார். தனியார் பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் போன்றவற்றிற்கு அரசின் அனுமதிகளைப் பெற இனி இணையத்திலேயே பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

பள்ளிக்கல்வித்துறையின் https://tnschools.gov.in இணையதளத்தில் இதற்கென புதிதாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://tnschools.gov.in/dms/?lang=en என்ற இணைய முகவரி வழியாக தனியார் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் தொடங்க அனுமதி, ஆரம்ப அங்கீகாரம், தொடர் அங்கீகாரம், கூடுதல் வகுப்பு தொடங்குவதற்கான அனுமதி உள்ளிட்ட சில சேவைகளை இணையம் வாயிலாக மேற்கொள்ளமுடியும்.

இதனால் வெளிப்படைத்தன்மையுடன் அரசின் உதவிகளை இனி விரைவில் பெற முடியும், கிட்டத்தட்ட 15,000 தனியார் பள்ளிகள் பயன்பெறும். மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட முக்கியமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment