அண்ணா பல்கலைக்கழத்தில் 77 கோடி ரூபாய் மோசடி.! தணிக்கைகுழு அதிர்ச்சி அறிக்கை.!

தமிழக பொறியியல் கல்லூரிகளின் தலைமை கல்லூரியாக செயல்படும் சென்னை அண்ணா பல்கலைகழகமானது, கடந்த 2016ஆம் ஆண்டு மாணவர்களின் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவது, வெற்று சான்றிதழ் அச்சடிப்பது தொடர்பாக கொடுக்கப்பட்ட காண்டிராக்ட் விவகாரத்தில் சுமார் 77 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தணிக்கை குழு அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த 2016ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைகழக கட்டுப்பாட்டின் கீழ் பயிலும் மாணவர்களின் சான்றிதழ்கள், தரவரிசை சான்றிதழ்கள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்குவதற்கு 2தனியார் நிறுவனங்களுடன் அண்ணா பல்கலை கழகம் 11 கோடியே 41 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த ஒப்பந்தத்தில் வழங்கலில் ஏல மோசடி நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தணிக்கை கூறப்பட்டுள்ளது மேலும் 7,33,722 பதிவுகள் மட்டுமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், 20,92,722 பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதற்காக பணம் வழங்கப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் வெற்றுச் சான்றிதழ்களை அச்சிடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் நிறுவனம், ஏற்கனவே ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் சகோதர நிறுவனம் என கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், சான்றிதழ் ஒப்பந்த நிறுவனம் 57.14 கோடி ரூபாய் மதிப்புக்கு வெற்றுச் சான்றிதழ்களை கொள்முதல் செய்துள்ளதாகவும் அச்சிடப்பட்ட சான்றிதழ்களில்  வடிவத்தை மாற்றியதால், 24.5 கோடி ரூபாய் மதிப்பிலான சான்றிதழ்கள் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனையெல்லாம் கணக்கிட்டு டிஜிட்டல் மயமாக்கல், வெற்று சான்றிதழ்கள் அச்சடித்து ஆகியவை தொடர்பாக 77 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Comment