#BREAKING: இவர்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினருக்கு பாம்புக்கடி விஷமுறிவு மருந்துக்கு பாம்பு பிடிக்க அனுமதி.

இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. விஷமுறிவு மருத்துக்கான பாம்புகளை பிடிக்க இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. வனத்துறை அனுமதி வழங்காத காரணத்தினால் இருளர் இன மக்களின் வாழ்வாதாரமும் முடங்கி போயிருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஷமுறிவு மருந்து தயாரிக்க நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு ஆகிய இனங்கள் பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.