ஏதாவது பேச வேண்டியது வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார் எஸ்.வி.சேகர் – முதல்வர்.!

இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். பின்னர், திண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் அதில் மாற்றமில்லை என கூறினார். இதையடுத்து, நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி.சேகர் பெரிய தலைவர் இல்லை, அவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏதாவது பேச வேண்டியது வழக்கு வந்தால் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வது எஸ்.வி.சேகரின் வழக்கம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும், எஸ்.வி.சேகர் அதிமுகவில் சரியாக செயல்படாததால் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். எஸ்.வி.சேகர் பாஜகவில் தான் இருக்கிறாரா..? பிரச்சாரத்திற்கு வரவில்லை..? ஸ்ரீ எங்களுக்கு ஹிந்தி தெரியும் என எஸ்.வி.சேகருக்கு எப்படி தெரியும்? என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024