9000 Crore : ஆட்டோ ஓட்டுநர் வங்கி கணக்கில் வந்து சேர்ந்த ரூ.9,000 ஆயிரம் கோடி.! தனியார் வங்கி விளக்கம்.! 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி எனும் ஊரை சேந்த ராஜ்குமார் என்பவர் , சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வாடகை கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது வங்கி கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து 9000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் இந்த குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை அப்போது எதோ தவறுதலாக செய்தி வந்துள்ளளது என நினைத்துள்ளார் ராஜ்குமார். அதன் பிறகு சோதனை செய்வதற்காக தனது நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.

அப்போது அந்த பண பரிவர்த்தனை நடைபெற்ற பிறகு தான் தனது அக்கவுண்டில் 9000 கோடி ரூபாய் வந்து சேர்ந்துள்ளதை ராஜ்குமார் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து வங்கி கிளை அவரை போன் மூலம் தொடர்பு கொண்டு வங்கிக்கு நேரடியாக வந்து பேச அழைத்துள்ளது. அதன் பிறகு மறுநாள் காலையில் வங்கிக்கு சென்றுள்ளார் வாகன ஓட்டுநர்  ராஜ்குமார்.

அப்போது தவறுதலாக நடைபெற்ற இந்த பணபரிவார்த்தணை பற்றி ராஜ்குமாரிடம் வங்கி அதிகாரிகள் விளக்கியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் கூற வேண்டாம் என கூறி, செலவு செய்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டாம் எனவும் வங்கி அதிகாரிகள் தரப்பு கூறப்பட்டதாக தெரிகிறது. மேலும், அவருக்கு வாகன கடன் உதவியும் செய்வதாக வங்கி அதிகாரிகள் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.