80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் தொடக்கம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மே 3ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சேலம் அண்ணா பூங்காவில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைப்பதற்கான பூமிபூஜை விழா நேற்று  நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி கட்டடம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்,  அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உடனான கூட்டத்தில் பிரதமரை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஆனால் இதுவரையிலும் அதற்கு மத்திய அரசு நேரம் ஒதுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் மணிமண்டபம் அமைக்கப்படுவது சேலத்திற்கு பெருமை சேர்க்கும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment