120 வந்தே பாரத் ரயில்கள்.! ரஷ்ய நிறுவனத்துடன் இந்தியா 6.5 பில்லியன் டாலர் ஒப்பந்தம்.!

இந்தியாவுக்காக 120 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரஷ்ய நிறுவனம் 6.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது.

இந்தியா: ரஷ்யாவின் மிகப்பெரிய ரயில் இன்ஜின்கள் மற்றும் ரயில் உபகரணங்களை உற்பத்தி செய்யும் டிரான்ஸ்மாஷ் ஹோல்டிங் (TMH) நிறுவனம், இந்திய இரயில்வேக்காக 120 வந்தே பாரத் விரைவு ரயில்களை தயாரித்து, வழங்குவது மற்றும் பராமரிப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவிற்கு 120 வந்தே பாரத் ரயில்களை தயாரிப்பதற்காக சுமார் 6.5 பில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அந்த ரஷ்ய நிறுவனம், ரயில் தயாரித்து ஒப்படைக்க 1.8 பில்லியனும், 35 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளுக்காக 2.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடப்படவில்லை எனவும், இந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிக்குள் இந்திய ரயில்வே மற்றும் TMH இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 16 பெட்டிகள் கொண்ட 120 வந்தே பாரத் ரயில்கள் ஒவ்வொன்றும் மகாராஷ்டிராவின்  லத்தூரில் உள்ள மராத்வாடா ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். ரயில்கள் 2026 மற்றும் 2030 க்கு இடையில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முதல் இரண்டு மாதிரி ரயில்கள் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சோதனைக்கு தயாராகிவிடும் என கூறப்படுகிறது.

தற்போது, 14 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கின்றன. அதில் ஒன்றாக, கேரளாவில் திருவனந்தபுரம் – கண்ணூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 25-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

Leave a Comment