4695 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி மோசடி.! அதிரடியாய் கைது செய்த அமெரிக்க எஃப்.பி.ஐ.!

$575 மில்லியன் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்டதாக 2 எஸ்டோனியர்கள் கைது செய்யப்பட்டனர்.

எஸ்டோனிய நாட்டைச்சேர்ந்த 2 குடிமக்கள் 575 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.4,695 கோடி) கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டதாக எஸ்டோனியாவின் டாலின் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். செர்ஜி பொட்டாபென்கோ மற்றும் இவான் டுரோஜின் ஆகியோர் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி பாலிபியஸ் என்ற கிரிப்டோகரன்சி வங்கியில் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

2015 மற்றும் 2019 க்கு இடையில் ஹாஷ்ஃப்ளேர் என்ற கிரிப்டோகரன்சி சுரங்க(Mining) சேவைக்கான ஒப்பந்தங்களை மக்களை வாங்க வைத்து 575 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.4,695 கோடி) அளவில் மோசடி வேலை செய்துள்ளனர்.

இது எஸ்டோனியாவின் மிகப்பெரிய மோசடி என்பதால் எஸ்டோனிய போலீசார் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ(FBI) போலிசின் உதவியை நாடியது. நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் 15 எஃப்.பி.ஐ(FBI) அதிகாரிகள் இணைந்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

Leave a Comment