6 மாதத்தில் 2500 கிலோ ‘பார்மலின்’ மீன்கள் பறிமுதல்.! உணவு பாதிப்பு அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்.!

தேனியில் உணவு பாதிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2,500 கிலோ ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  

தேனியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாள்பட்ட கெட்டுபோன இறைச்சிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி,  பல்வேறு  இறைச்சி கடைகளில் சோதனை செய்ததில் 25 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடந்த 6 மாதங்களில் தேனி மாவட்டத்தில் மட்டுமே 2,500 கிலோ பார்மலின் (கெட்டுப்போகாமல் இருக்க உதவும் ரசாயனம்) தடவிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

 

 

Leave a Comment