2 ஆண்டு ஆட்சி… மக்களின் மனதில் மகிழ்ச்சி; முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

தமிழக அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி இரண்டு ஆண்டு சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற தமிழக அரசின் சாதனை மலர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கும் காணொளி தொகுப்பினையும் முதல்வர் வெளியிட்டார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் சாதனை மலரை வெளியிட்ட பின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நமது திராவிட ஆட்சி என்பது சமூக நீதி, சம நீதி, சகோதரத்துவம், சுயமரியாதை, சமதர்மம் நிறைந்தது. அனைத்து மக்களும் நலன் பெரும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

அரசுப்பள்ளியில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், மகளிருக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நான் முதல்வன் திட்டம் என ஒவ்வொருவருக்கும் நமது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மேலும் ஆட்சிக்குவந்து இரண்டு ஆண்டுகளில் 6,905 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன், 16 மாவட்டங்களில் கள ஆய்விற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார். நமது ஆட்சியின் மூலம் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள், மக்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி என்று கூறினார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அயராது உழைப்பேன், என்றும் உங்களில் ஒருவனாகவும், உங்களோடு ஒருவனாகவும் இருந்து பாடுபடுவேன் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.