கருவில் இருக்கும் குழந்தைக்கு ‘மூளை’ அறுவை சிகிச்சை.! சாதனை படைத்த அமெரிக்க மருத்துவர்கள்.!

கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

உலகின் முதன்முறையாக, அமெரிக்க மருத்துவர்கள் குழுவானது, கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். தாயின் கருவில் உருவாகி, 34 வாரங்கள், 2 நாட்களை (சுமார் 8 மாதம்) கடந்த குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக கருவில் இருக்கும் போதே செய்யபட்டுள்ளது.

அந்த குழந்தைக்கு பிறந்த பிறகு இதய செயலிழப்பு மற்றும் மூளை காயம் பெரிதாக பாதிக்கும் வகையில் இருந்தது. இதனை தடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது உடனடியாக அமெரிக்க மருத்துவர்கள் இந்த ஆய்வு செய்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த்ள்ளனர்.

அதன் பின்னர், கருப்பையில் இருந்து முன்கூட்டியே குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், இரண்டு நாட்களுக்கு பிறகு குழந்தை ஆபரேஷன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது. புதிதாகப் பிறந்த குழந்தை , வீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் பல வாரங்களுக்குப் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

தற்போது குழந்தை வீட்டிற்கு அனுப்பப்பட்டு, குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வருகிறது, மருந்துகள் எதுவும் இல்லாமல், சாதாரணமாக சாப்பிட்டு சமசீராக உடல் எடை அதிகரித்து வருகிறது.  மூளையில் எந்த எதிர்மறையான விளைவுகளும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது வரை இல்லை என்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.