முதல்வரின் 9 நாள் பயணத்தில் ரூ.1,250 கோடி ஒப்பந்தம் கையெழுத்து!

சிங்கப்பூர், ஜப்பானில் முதலமைச்சர் 9 நாள் பயணத்தில் ரூ.1,250 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

அதன்படி, கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜப்பானில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சமயத்தில், 9 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு இன்று  திரும்புகிறார் முதலமைச்சர்.

இந்த நிலையில், சிங்கப்பூர், ஜப்பானின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 9 நாள் பயணத்தில் ரூ.1,250 கோடிக்கு 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னை திரும்புகிறேன் என் முதல்வர் கூறியுள்ளார்.