ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.! பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம்.!

புதிய வாக்காளர்கள், திருத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை என மொத்தமாக 12.32 லட்சம்  வாக்காளர்களுக்கு புதிய பாதிப்பு வசதி கொண்ட வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட உள்ளது. 

வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை பிரதான கட்சிகள் ஆரம்பித்தது போல, தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே, மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து, தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்திறங்கிவிட்டன. அவை, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர் அடையாள அட்டை : தற்போது, ஏற்கனவே உள்ளதை விட கூடுதல் பாதுகாப்பு வசதியை கொண்ட புதிய வாக்காளர் அடையாள அட்டையை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டை அறிமுகபடப்படுத்தப்பட உள்ளது. அங்கு, புதிய வாக்காளர்களுக்கும், திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர்களுக்கும் இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்பட உள்ளது.

12.32 லட்சம்  வாக்காளர்கள் : இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையர் தலைவர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதிய பாதிப்பு வசதி மேம்படுத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் ஹாலோகிராம் உள்ளே பதியப்பட்டு இருக்கும். பழைய அட்டையில் வெளியே ஹாலோகிராம் பதியபட்டு இருக்கும். இதன் மூலம் தற்போது புதிய வாக்காளர்கள், திருத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை என மொத்தமாக 12.32 லட்சம்  வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட உள்ளது.

Leave a Comment