100 சதவீதம் வெற்றி… இடைத்தேர்தலில் வாக்களித்தார் அதிமுக வேட்பாளர்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அதிமுக வேட்பாளர் தென்னரசு ஜனநாயக கடமையாற்றினார்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 238 வாக்குசாவடிகளியிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தென்னரசு வாக்களித்தார்:

admkthennarasu27

2.27 லட்சம் வாக்காளர்களில் 2 மணி நேரத்தில் 22,970 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது வாக்கினை செலுத்தினார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்களித்தார். ஈரோடு கருங்கல்பாளையம் கல்லு பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடியில்தனது வாக்கை பதிவு செய்தார் தென்னரசு.

100 சதவீதம் அதிமுக வெற்றி:

வாக்களித்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தென்னரசு, இடைத்தேர்தலில் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இதனால், 100 சதவீதம் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது. ஒரு சில இடங்களில் தவறு நடக்கலாம். ஆனால், வாக்குப்பதிவு அமையான முறையில் நடைபெறுகிறது, எந்த பிரச்னையும் இல்லை என்றார்.

Leave a Comment