தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு..!சம்வத்திற்கு பிறகு செய்தியாளரை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!!

தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி நிலவரம் பற்றியும் மு.க ஸ்டாலின் தர்ணா போராட்டம் பற்றியும் பேட்டியளித்தார் அதன்படி அவர் அளித்த பேட்டி:

இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் அறையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதுஅலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஒரு சில நிமிடங்கள் இருந்துவிட்டு திடீரென மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வெளியே சென்று விட்டனர்

15 நிமிடங்கள் கழித்து எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சரை பார்க்க சென்றதாகவும், ஆனால் முதலமைச்சர் மறுத்ததாகவும் செய்தி வெளியானதுவேண்டுமென்றே திட்டமிட்டு மு.க.ஸ்டாலின் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்நான் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இருந்தபோது மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் அறைக்கு சென்றுள்ளார்

எனவே முதலமைச்சர் தம்மை சந்திக்கவில்லை என மு.க.ஸ்டாலின் கூறியது உண்மைக்கு மாறானது2013ஆம் ஆண்டிலேயே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஸ்டெர்லைட்டுக்கு மின்இணைப்பை துண்டித்தார்

ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் ஆலையை துவங்க அனுமதி பெற்றது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது

ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான அனுமதியை புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துவிட்டதுஇன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதுஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து வருகிறது

வேண்டுமென்றே சிலர் பொதுமக்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து போராட்டக்காரர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது ஸ்டெர்லைட் ஆலையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் இயக்க முடியாது

எதிர்க்கட்சிகள் தூண்டுதலின்பேரிலும், சமூக விரோதிகளின் தூண்டுதலின் பேரிலும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி நடைபெற்றுள்ளது வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்டதால் போராட்டம் மோசமான நிலையை அடைந்திருக்கிறது

அன்றைய தினம் நடைபெற்ற சம்பவம் விரும்பத்தகாத சம்பவம் 144 தடையுத்தரவை மீறி சில விஷமிகளும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் அப்பாவி பொதுமக்களை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்

144 தடையுத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மதிக்க வேண்டும்தூத்துக்குடியில் ஊர்வலம் சென்றவர்கள் போலீசாரை தாக்கியதால், கண்ணீர்புகைக் குண்டு, தடியடி நடத்தப்பட்டதுசில அரசியல் கட்சித் தலைவர்களும், சில சமூக விரோதிகளும் ஊடுருவியதாலேயே இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு ஏற்பட்டதுமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி.

தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள்

Leave a Comment