எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை..! வியாபாரிகள் அச்சம்: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க 72வது மாநில மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உரையாற்றினார். முன்னதாக மதுரை நாடார் மகாஜன சங்கம் எஸ் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்தார்.

மாநாட்டில் அவர் பேசுகையில், “இன்றைய தினம் தமிழ்நாடே மதுரையை உற்று நோக்கியிருக்கிறது. நாடார் என்பவர்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். சிறுகடையில் ஆரம்பித்து பெரிய நிறுவனம் தொடங்குவார்கள்.. பழகுவதற்கு இனிமையானவர்கள். பெருந்தலைவர் என்ற பெயர் காமராஜரை மட்டும் தான் குறிக்கும்.

நாம் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்று சொன்னால் காரணம் அவர் தான். ஏனெனில், அவர் முதல்வராக இருந்த காலத்தில் தான் அணைகள் கட்டப்பட்டன.. பெரிய தொழிற்பேட்டைகள் நமது மாநிலத்திற்கு வந்தன மற்றும் மின்சார உற்பத்தி துவங்கப்பட்டது. இதையெல்லாம் செய்ததால் தான் தமிழகம் இன்று ஏற்றம் கண்டுள்ளது. நாடார் மக்களுக்காக அதிமுக பல நன்மைகளை செய்துள்ளது.

வரலாறு தெரியாமல் பேசக்கூடாது! பாஜகவை தென்மாநிலங்களில் அறிமுகப்படுத்தியது அதிமுக – கேபி முனுசாமி

பாதுகாப்பு அனைவருக்கும் முக்கியம்.. அதை அதிமுக ஆட்சி கொடுத்தது. ஆனால் இன்றைக்கு பாதுகாப்பே இல்லை… எங்கே பார்த்தாலும், கொலை, கொள்ளை, வழிப்பறி என வியாபாரம் செய்பவர்கள் அச்சத்தில் உள்ளனர், தமிழ்நாடு மோசமான நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் சமுதாயத்திற்கு இடமுண்டு, வேட்பாளர்களை தேர்தலில் வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை” என பேசினார்.

Leave a Comment