கையில் துப்பாக்கி உடன் ராக்கி பாய்! யாஷ் 19 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

கையில் துப்பாக்கி உடன் ராக்கி பாய்! யாஷ் 19 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

yash 19

கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் அடுத்ததாக தன்னுடைய 19-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கடைசியாக யாஷ் கேஜிஎப் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து யாஷ் தன்னுடைய 19-வது படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

யாஷ் நடிக்கும் 19-வது திரைப்படத்திற்கான தலைப்பு என்ன இயக்குனர் யார் என்ற  விவரங்கள் வருகின்ற டிசம்பர் 8-ஆம் தேதி காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் இயக்குனர் யார் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை  கே.வி.என் என்கிற தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

கேஜிஎப் 3 நிச்சயமாக வரும் ராக்கி பாய் இருப்பார்! அதிரடி அப்டேட் விட்ட பிரசாந்த் நீல்!

அதன்படி யாஷ் 19-வது படத்திற்கான தலைப்பு டாக்ஸிக் என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை தேசிய விருது வென்ற பிரபல மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் தான் இயக்குகிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் யாஷ் கையில் மிகப்பெரிய துப்பாக்கி ஒன்றையும் வைத்து இருக்கிறார். எனவே போஸ்டரை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக ஆக்சன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமின்றி இந்த டாக்ஸிக் திரைப்படம்  வரும் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படம் பற்றிய கூடுதல் தகவல் என்னவென்றால், படத்தில் யாஷிற்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளாராம். ஆனால், இன்று வெளியான அறிவிப்பு அவர் படத்தில் நடிக்கும் தகவல் அறிவிக்கப்படவில்லை விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கேஜிஎப் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக மூன்றாவது பாகமும் உருவாகவுள்ளது. படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது சலார் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். அந்த சமயம் யாஷ் தன்னுடைய 19-வது படத்திலும் நடித்து முடித்துவிடுவார். அதன் பிறகு கேஜிஎப் 3 தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube