சிறகடிக்க ஆசை இன்று.. புதிய தொழிலதிபர் ஆகும் விஜயா..

sirakadikka asai june 15

சிறகடிக்க ஆசை -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [15 ஜூன் ] விறுவிறுப்பான காட்சிகளை இந்த பதிவில் காணலாம்.

முத்து தினேஷை துரத்திக் கொண்டு போய் பிடித்து அடி அடி என அடித்து விடுகிறார் .இதைச் சிட்டி  ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு போலீஸ் வருகின்றனர். அவர்களை விசாரிக்கிறார்கள் .அப்போது முத்து சொல்கிறார்.. இவன் பொண்ணுங்களா தப்பா பேசிட்டு இருந்தா இவனை ஏற்கனவே எனக்கு தெரியும் அப்படின்னு சொல்றாரு.

போலீஸ் சொல்றாங்க இந்த ஏரியாவுல ஒரு ஆக்சிடெண்ட் நடந்துச்சுன்னு சொன்னாங்க.. அதுக்கு முத்து  சொல்லுறாரு ஆமா சார் இவன்தான் ஒரு பாட்டியை  தள்ளிவிட்டு வந்துட்டான் அதனால நான் அவனை துரத்தி வந்தேன் அப்படின்னு சொல்றாரு.

உடனே போலீஸ் அவரை புடிச்சி இழுத்துட்டு போறாங்க இனிமே நாங்க பார்த்துக்கிறோம் அப்படின்னு சொல்லிட்டு வண்டியில் ஏத்துறாங்க.. இத சிட்டி போட்டோ எடுத்து ரோகினிக்கு அனுப்பி விடுறாங்க..

மனோஜ் மீனாவை புகழும் தருணம்;

ரோகிணியும் மனோஜும் சாப்பிட்டுட்டு இருக்காங்க .. அப்போ மனோஜ் மீனாவோட சமையல் நல்லா இருக்குது.. முத்துக்கு நல்லா சமைக்கிற வைப் கிடைச்சிருக்கா அப்படின்னு சொல்றாங்க. உடனே ரோகிணி அவங்கள பார்த்து முறைக்கிறாங்க..  ஆமாம் மீனாவோட சமையல் நல்லா தான் இருக்கும் ,எனக்கு அந்த அளவுக்கு சமையல் தெரியாது அப்படின்னு கோவமா சொல்றாங்க.

அதுக்கு மனோஜ் இல்ல ரோகினி நான் அப்படி சொல்ல வரல நீ சமைச்சது நல்லா தான் இருக்கு அப்படின்னு சொல்றாரு சொல்லிட்டு அங்கிருந்து போயிடறாரு. அப்போ ரோகினிக்கு மெசேஜ் வருது பயத்தோட செல்ல எடுத்து பாக்குறாங்க.. சிட்டி அனுப்புன போட்டோ வந்திருக்கு அப்பாடா இனிமே இவன் தொல்லை நமக்கு இருக்காது அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிறாங்க..

விஜயாவின் டான்ஸ்  ஸ்கூல் பிளான்;

பார்வதி வீட்டுக்கு வராங்க விஜயா அப்பதான் கிச்சனுக்குள்ள இருந்து வெளியில வராங்க. அப்போ விஜயா  சொல்றாங்க.. இப்பதான் பார்வதி சமையல் வேலை எல்லாம் முடிஞ்சது அப்படின்றாங்க. என்ன விஜயா சொல்ற மூணு மருமகள்  இருக்குறாங்க .

அதுக்கு விஜயா சொல்றாங்க எல்லாருமே வேலைக்கு போயிடறாங்க அந்த மீனா வீட்டு வாசல்ல பூக்கடை வச்சிருந்தப்ப கூட இடையில வந்து வேலை செஞ்சுட்டு போவா இப்போ அதையும் நான் எடுக்க வச்சுட்டேன் அப்படின்னு தெரியாம சொல்லிட்டாங்க.. இத பார்வதி என்ன இதுக்கு காரணம் நீ தானா அப்படின்னு கேக்குறாங்க. என்கிட்ட கூட நீ சொல்லவே இல்ல அப்படின்னு சொல்றாங்க.

ஆமா நான் தான் கார்ப்பரேஷனுக்கு  போன் பண்ணி சொன்னேன். இதை யாருகிட்டயும் வெளியில் சொல்லிடாத அப்படின்னு பார்வதி கிட்ட சொல்றாங்க.. இப்போ மீனாவும் ரோகிணியும் வெளியிலிருந்து வராங்க. அப்போ விஜயா மீனா வந்ததும் வராததுமா திட்றாங்க.

இனிமே நீ வேலைக்கு எல்லாம் போகக்கூடாது அப்படின்னு சொல்றாங்க .அதுக்கு மீனா என் புருஷன் இத சொல்லட்டும் அப்படின்னு சொல்றாங்க.. விஜயா ஒன்னும் பேச முடியாம வாய மூடிறாங்க.. ரோகினி விஜயா கிட்ட சொல்றாங்க அத்தை நீங்க ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கலாம் இல்ல ..அப்படின்னு கேக்குறாங்க.

விஜயாவும் அப்படியே யோசிக்கிறாங்க.. பார்வதி சொல்றாங்க எங்க வீட்டுல கூட நீ நடத்திக்கோ அப்படின்னு பர்மிஷனும் கொடுத்துடறாங்க. உடனே விஜயா கனவு காண ஆரம்பித்துவிடுகிறார் . இப்போ அவங்க ரூம்ல போயிட்டு மேக்கப் பண்றதுக்கு போயிட்டாங்க.. அண்ணாமலை, முத்து வீட்டுக்கு வராங்க .

மீனா கிட்ட கேக்குறாங்க ஏ மீனா உனக்கு உடம்பு சரியில்லையா என்ன ஆச்சு அம்மா போன் பண்ணி வீட்டுக்கு வர சொன்னாங்களே . அதுக்கு மீனா சொல்றாங்க இல்லங்க அப்படி எல்லாம் இல்ல . ரவியும் சாப்பாடோட வராரு அப்பா என்ன ஆச்சு அம்மா இன்னைக்கு சாப்பாடு வாங்கிட்டு வர சொன்னாங்க என்னாச்சுன்னு கேக்குறாங்க..

முத்து மீனா கிட்ட கேக்குறாங்க ஏன் மீனா சமைக்கலையான்னு கேக்குறாங்க அத்தை தாங்க சமைக்க வேண்டாம்னு  சொல்லிட்டாங்க .. சுருதி சொல்றாங்க அப்ப இன்னைக்கு ஏதோ ஸ்பெஷல் இருக்கு போல அப்படின்னு சொல்றாங்க .இப்ப எல்லாருமே விஜயாவோட  ரூம்ம பாத்துட்டே இருக்காங்க. அதோட இன்னைக்கு எபிசோட் முடிந்தது.