டாப் ஹீரோவை வைத்து 400 கோடியில் படம்! பாலிவுட்டுக்கு பறக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

டாப் ஹீரோவை வைத்து 400 கோடியில் படம்! பாலிவுட்டுக்கு பறக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

A.R. Murugadoss

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து அப்போது கம்பேக்  கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். அவர் கடைசியாக ரஜினியை வைத்து  தர்பார் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் . இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்று கூறலாம். எனவே அடுத்ததாக எந்த திரைப்படத்தையும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவில்லை.

எனவே ரசிகர்கள் பலரும் அவர் இப்போது அடுத்ததாக படத்தை இயக்குவார் என காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்ததாக அவர் சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது.  சிவகார்த்திகேயன் தற்போது தனது 21 வது திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்ததாக தனது 22வது திரைப்படத்தில் நடித்துவிட்டு 23 வது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லால் சலாம் படத்தை தட்டி தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!!

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் திரைப்படத்தை முடித்த பிறகு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பாலிவுட் சென்று அங்கு சல்மான் கான் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த பிரம்மாண்ட திரைப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  எனவே சிவகார்த்திகேயனை வைத்து இந்த ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் ஒரு படத்தை இயக்கி முடித்து விடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Join our channel google news Youtube