லால் சலாம் படத்தை தட்டி தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!!

லால் சலாம் படத்தை தட்டி தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!!

lal salaam ott update

லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லால் சலாம்

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

லால் சலாம் ஓடிடி 

இந்நிலையில், இந்த திரைப்படம் திரையரங்குகளில் பிறகு எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் படத்தை எந்த ஓடிடி நிறுவனம் வாங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது அதற்கான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கி இருக்கிறதாம்.

போட்டோ எடுக்க சொன்னது குத்தமா? ரசிகரை தாக்கி போனை வீசிய ஆதித்ய நாராயண்!

படத்தை வாங்கும்போது படத்தினை 60 நாட்கள் அதாவது இரண்டு மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம் என்பது போல பேச்சுவார்த்தை நடைபெற்றதாம் . ஆனால், தற்போது திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். எனவே லால் சலாம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

லால் சலாம் வசூல் 

லால் சலாம் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல சுமாரான வரவேற்பை பெற்று வரும் நிலையில், வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *