புகைப்பிடிப்பதை கைவிட்டதற்கு அவள் தான் காரணம் – மனம் திறந்த ஷாஹித் கபூர்.!

புகைப்பிடிப்பதை கைவிட்டதற்கு அவள் தான் காரணம் – மனம் திறந்த ஷாஹித் கபூர்.!

Shahid Kapoor smoke

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தான் ஏன் புகைப்பிடிப்பதை நிறுத்தினார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

ஷாஹித் 2015-ல் யூடியூப்பரான மீரா ராஜ்புத்தை திருணம் செய்து கொண்டார். ஷாஹித் மற்றும் மீரா ராஜ்புத் ஆகியோர் 2016-ல் தங்கள் முதல் குழந்தையான மகள் மிஷாவை வரவேற்று, பின்னர் அவர்கள் செப்டம்பர் 2018-ல் அவர்களது இரண்டாவது குழந்தையான மகன் ஜைனை வரவேற்றனர்.

தற்போது, இவரது மகள் மிஷாவுக்காக புகைபிடிப்பதை விட்டுவிட்டதாக கூறியுள்ளார். ஆம்  சமீபத்தில், மாடல் அழகியான நேஹா துபியாவின் பிரபல அரட்டை நிகழ்ச்சியான ‘நோ ஃபில்டர் நேஹா’வில் கலந்து கொண்டார்.

Read More – கலகலப்பு 3-யில் கவின் கேட்ட சம்பளம்? தெறித்தோடிய சுந்தர் சி!

அந்த நிகழ்ச்சியில் இவர் பேசுகையில், “எப்போதும் எனது மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்தே புகைப்பிடிப்பேன். இதுவே அப்பழக்கத்தை நான் கைவிட முக்கிய காரணமாக இருந்தது. ஒருமுறை அவளுக்கு தெரியாமல் புகைக்கும்போது, எவ்வளவு நாள் இப்படியே இருப்போம், இனி வாழ்க்கையில் சிகரெட்டை தொடவே கூடாது என முடிவெடுத்தேன்” என்று உருக்கமாக கூறிஉள்ளார்.

READ MORE – முத்தக்காட்சி எல்லாம் இருக்கு! அனுபமா கேட்ட அதிர வைக்கும் சம்பளம்?

தனது குழந்தைகளைப் பற்றி பேசுவது இது முதல் முறை அல்ல. பல நிகழ்ச்சியில் தனது குழந்தை குறித்து பேசியுள்ளார். ஷாஹித் கபூர் சமீபத்தில் அமித் ஜோஷி மற்றும் ஆராதனா சாவின் தெரி பாடன் மே உல்ஜா ஜியா படத்தில்  நடித்திருந்தார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடியைத் தாண்டி வசூல் செய்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *