முத்தக்காட்சி எல்லாம் இருக்கு! அனுபமா கேட்ட அதிர வைக்கும் சம்பளம்?

முத்தக்காட்சி எல்லாம் இருக்கு! அனுபமா கேட்ட அதிர வைக்கும் சம்பளம்?

Anupama Parameswaran

நடிகை அனுபமா பரமேஸ்வரன் சித்து ஜொன்னலகத்தாக்கு ஜோடியாக தற்போது தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் சைரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம்.

எனவே, அனுபமா அடுத்ததாக இந்த தில்லு ஸ்கொயர் படத்தினை எதிர்பார்த்து தான் காத்திருக்கிறார். பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனக்கு வரும் படங்களை எல்லாம் அவர் விடாமல் நடிப்பதாகவே கூறப்படுகிறது. இந்த தில்லு ஸ்கொயர் படத்தில் அவருடன் மடோனா செபாஸ்டியன், மீன் வெங்கட், முரளிதர் கவுட் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இனிமே அப்படி நடிக்காதீங்க! வேதனையுடன் அனுபமாவுக்கு கோரிக்கை வைத்த ரசிகர்!

இந்த திரைப்படத்திற்கான சின்ன டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால், இதுவரை இல்லாத அளவிற்கு படத்தில் அனுபமா கிளாமராக உடை அணிந்து இருந்தார். அது மட்டுமின்றி ஒரு காட்சியில் ஹீரோவுடன் லிப் லாக் காட்சியும் செய்து கொண்டு இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்பது போல கூறினார்கள். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க அனுபமா எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இதுவரை ஒவ்வொரு படத்துக்கும் ரூ. 1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் அனுபமா தில்லு ஸ்கொயர்படத்துக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறாராம். படத்தில் முத்தக்காட்சிகள் இருந்த காரணத்தால் அவர் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *