தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைவு.!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மன்னர் ஆட்சி ஆதிகாலத்தில் இருந்து தங்கம் என்பது தலை மீது தூக்கி வைத்து கொண்டாட கூடிய பொக்கிஷமாக உள்ளது. அந்த அளவிற்கு தங்கமானது நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று சொல்லலாம். இவ்வுலகில் உயர்ந்த விலை மதிப்பு மிக்க பொருட்கள் பல இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகம் இன்னும் குறைந்த பாடில்லை.

குறிப்பாக, தங்கத்தை வாங்கி குவிப்பவர்கள் பெண்களே…அதிலும் இந்தியா நாட்டின் தமிழகத்தில் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. தங்கத்தின் தேவை அதிகரிக்கும் பொழுதும் விலை உயர்கிறது, சென்னையில் தங்கத்தின் தேவை மற்றும் விநியோகம் மற்ற இந்திய நகரங்களை விட எப்போதும் வித்தியாசமாக இருக்கும்.

இவ்வாறு தினமும் ஏற்றம், இறக்கும் காணப்படும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று (05. 02. 2024) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,850க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 1 கிராம் 76 ரூபாய், 70 காசகளுக்கும், கிலோவுக்கு ரூ.300 சரிந்து 1 கிலோ 76,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

எனக்கும் கவினுக்கும் போட்டியா? மணிகண்டன் பளீச் பதில்!

சென்னையில் நேற்றைய தினம் (04. 02. 2024) எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செயப்பட்டது. அதன்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது ரூ.46,960க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்தது ரூ.5,870க்கு விற்பனை ஆனது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து ரூ.77க்கும், கிலோ வெள்ளி ரூ.77,00க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment