சியான் பக்கம் வீசிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ காற்று.! பாராட்டு மழையில் நனையும் இயக்குனர்.!

Manjummel Boys: மலையாள சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவில் மிகவும் பெரிதாக பேசப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட இயக்குனரை நடிகர் சியான் விக்ரம் பாராட்டியுள்ளார். இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல விமர்சனத்தை பெற்று இரண்டாவது வரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

READ MORE – கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய மல்லு சேட்டன்ஸ்.!

முன்னதாக, கமல் நடித்த குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலையும் இப்படத்தில் இடம் பெற செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவ்வாறு படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மலையாள சினிமாவிற்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள முக்கிய திரைபிரபலங்கள் இந்த படத்திற்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!

சமீபத்தில் படக்குழு சென்னையில் கமல்ஹாசனை சந்தித்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன் நேரில் அழைத்து படத்தினை பாராட்டி பேசி உள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் சியான் விக்ரமை சந்தித்துள்ளார் போல் தெரிகிறது. ஆம், இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து விக்ரம் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Manjummel Boys director
Manjummel Boys director File Image

READ MORE – பணத்திற்காக அந்த விஷயத்தை செய்யும் ஷ்ரத்தா தாஸ்? பயில்வான் சொன்ன சீக்ரெட்!

இந்தப் படம், கொடைக்கானலுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் கேரளாவின் மஞ்சும்மல்லைச் சேர்ந்த நண்பர்களில் ஒருவர் கமல்ஹாசன் நடித்த குணா படத்தில் இருந்து குகைக்குள் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் குழுவைச் சுற்றி வரும் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர் திரைப்படம். விரைவில் இந்த படத்தை தெலுங்கிழும் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment