கோடி கணக்கில் வசூல்…லோகேஷ் சம்பளத்தில் பாக்கி வைத்த ‘லியோ’குழு?

கோடி கணக்கில் வசூல்…லோகேஷ் சம்பளத்தில் பாக்கி வைத்த ‘லியோ’குழு?

lokesh kanagaraj salary

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர். வயது சிறுசு…வரலாறு பெருசு என்ற பழமொழிக்கு சொந்தக்காரர். காரணம் அவரது படம் அந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது. அபாரமாக வளர்ச்சி அடைந்து வரும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ‘GSquad’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ்   ரஜினியின் 171-வது படமான தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மட்டும் படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இப்படி லியோ படம் கோடிக்கணக்கில் வசூல் செய்தும், இயக்குனர் லோகேஷுக்கு சம்பளம் பாக்கி வைத்திருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. முன்னதாக படப்பிடிப்பின் போது, விஜய்க்கும் லோகேஷுக்கும் முரண்பாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. அப்போது கூட லோகேஷ் எந்தவித மனசங்கடமும் அடையவில்லையாம்.

ஆனால் இப்பொது, சம்பளம் தொடர்பாக பரப்பப்படும் தகவல்கள் லோகேஷ் கனகராஜை பெரிதளவில் அப்செட் ஆக்கியுள்ளதாம். இது குறித்து ஒரு தரப்பு கூறுகையில்,தயாரிப்பு நிறுவனம் இயக்குனருக்கு முழு சம்பளத்தையும் கொடுக்கவில்லை என்றால், படத்தின் இறுதி நகலை வழங்காமல் இருக்க இயக்குனருக்கு உரிமை உண்டு என்றும், தயாரிப்பாளருக்கு எதிராக சங்கத்தை அணுகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால், இந்த விவகாரத்தில் சம்பளம் பாக்கி வைத்திருந்தால், படம் வெளியாகி இருக்காது என்றும், இப்பொது படமே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பதால், லோகேஷ் கனகராஜுக்கும், ‘லியோ’ தயாரிப்பாளருக்கும் இடையே எந்த (கொடுத்தல், வாங்கல்) சம்பளம் பாக்கியும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

முன்னதாக, கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கிய லோகேஷ் கனகராஜ், ‘லியோ’ படத்துக்கு மிகப்பெரிய அளவில் சம்பள உயர்வு பெற்றுள்ளார். அதன்படி, அவருக்கு ரூ.20 கோடி சம்பளமும் ஜிஎஸ்டி ரூ.2 கோடி சேர்த்து மொத்தமாக ரூ.22 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.

போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது! ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் பதிலடி!

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்தினை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

Join our channel google news Youtube